காதலிக்கவும் மாட்டங்குரா…. பேசவும் மாட்டங்குரா… அதான் கொன்னுட்டேன்… கடலூரில் பயங்கரம்….

0
85

தற்போது இருக்கிற இளைஞர் சமுதாயம் அனைத்தையும் விரைவில் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கின்றனர். இதனால் அதிகமான காதல் விவகாரம் எழுகின்றது.

அதில் பல காதலர்கள் வாழ்க்கை சீரழிந்து தான் போகிறது. அவர்கள் காதல் என்று ஒரு பொய்க்குள் இருக்கின்றனர். இந்த காதாலால் ஒரு பெண் அல்லது ஆண் பலியாகத்தான் ஆகின்றனர்.

விருத்தாச்சலம் அருகே ஒரு கல்லூரி மாணவியை கொன்ற கொலையாளி ஆகாஷ் காவல்துறையினரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார். அவர் அந்த பெண்ணை பள்ளியில் இருந்து காதலித்துள்ளார்.

திலகவதி என்ற பெண்தான் அந்த கொலை செய்யப்பட பெண். அந்த பெண் கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே கருவேப்பிலங்குறிச்சியைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி கொளஞ்சியின் மகள்ஆவார்.

திலகவதியின் அப்பாவும் அம்மாவும் கட்டிடத்தொழில் செய்து வருகின்றனர். தனியார் கல்லூரியில் பிஏ ஆங்கில இலக்கியம் படித்து வந்த திலகவதியை ஆகாஷ் என்பவன் கொலை செய்துள்ளான்.               ஆனவக்கொலை என்றும், காதல் தகராறில் கொலை என்றும் பல ஊடகங்களிலும் செய்திகள் பரவின. ஆனால் அவன் காவல்துறையினர் விசாரணையில் திலகவதியை கொன்றதை ஒத்துக்கொண்டான்.
ஆனால் அந்த பையனின் தந்தை, அந்த பெண்ணின் குடும்பத்தினர் தான் அந்த பெண்ணை ஆனவக்கொலை செய்துள்ளனர் என்று கூறியுள்ளார். இவர்கள் இருவரும் வேறு வேறு சமுதாயத்தினர்.

ஆகாஷ் தனது வாக்குமூலத்தில் பள்ளியில் படிக்கும் போதே தன்னுடன் பேசி பழகிய திலகவதி தற்போது பேசுவதில்லை என்றும் கல்லூரியில் படிக்கப் போனதால் கூலி வேலை செய்து வந்த தன்னை ஒதுக்கியதாகவும் கூறியிருக்கிறான்.
மேலும் தனது நம்பரை ப்ளாக் செய்ததாகவும் கூறினான். கல்லூரி சென்று விடு திரும்பிய பெண்ணின் வீட்டிற்கு சென்று பேசியபோது ஏற்பட்ட வாக்குவாதத்தில் கத்தியால் குத்தியுள்ளார்.

அந்த பெண்ணை ஒருதலையாக காதலித்த அந்த பையன் ஆத்திரத்தில் கொலை செய்துள்ளான். இதனால் அந்த பெண்ணின் வாழ்க்கையும் போச்சு. அந்த பையனின் வாழ்க்கையும் போச்சு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here