இறுதியில் இறுதி போட்டிக்கு முன்னேறிய சென்னை அணி…. வீட்டுக்கு கிளம்பிய டெல்லி அணி….

0
68

VIVIO IPL 2019ல் நேற்று நடைபெற்ற தகுதி சுற்றில் சென்னை அணியும் டெல்லி அணியும் மோதின. இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்இறுதி போட்டிக்கு செல்வர். மும்பை ஏற்கவனவேசென்றுவிட்டனர்.

இந்த நிலையில் வெற்றி பெற்றால் தான் இறுதி போட்டிக்கு செல்லமுடியும் என்ற முனைப்பில் சென்னை அணியும், டெல்லி அணியும் களம் இறங்கினர். சென்னை டாஸ் வென்று பௌலிங்செய்தது.

முதலில் களம் இறங்கிய டெல்லி அணியின் வீரர்கள் ஒரு நல்ல ஸ்டார்ட் கொடுத்தாலும், விரைவில் விக்கெட்டை பறிகொடுத்தனர். டெல்லி அணியின் ப்ரித்வி ஷா பந்தை விளாசினார்.               தோனி பந்துவீச்சாளர்களை வழக்கம் போல தீபக் சாஹர், பின் ஹர்பஜன், ஜடேஜா, தாஹிர் சுழல் என பயன்படுத்த, டெல்லி பேட்ஸ்மேன்கள் திக்குத் தெரியாமல் ஆட்டமிழந்து வெளியேறினர்.
ஆனால் பிரிதிவி ஷா 5, அடுத்து தவான் 18, மன்றோ 27, ஸ்ரேயாஸ் ஐயர் 13, ரிஷப் பண்ட் 38 ரன்கள் சேர்த்தனர். பின் வரிசை வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து சொதப்பியிருன்தனர்.
இறுதியில் டெல்லி அணியின் பௌலர் இசாந்த் சர்மா கடைஓவரில் 16 ரன்கள் எடுத்து அந்த அணியின் ரன்களை 9 விக்கெட்டுகளுக்கு 147 ரன்கள் எடுத்து ஓரளவு சமாளித்தனர்.

148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி சென்னை அணியின் ஷேன் வாட்சன் மற்றும் பாப் டு ப்ளசிஸ் இரண்டு பேரும் களம் இறங்கினர். ஆனால் துவக்கம் சரியில்லை.

அதன் பிறகு அவர்கள் சிறப்பாக விளையாடி பாப் டு ப்ளசிஸ் 39 பந்துகளில் 50 ரன்களும், ஷேன்வாட்சன் 31 பந்துகளில்50 ரன்களும் எடுத்துஆட்டமிழந்தனர். இது தான்சென்னையின் வெற்றிக்குவித்திட்டது.

அதன் பிறகு சென்னை அணி 19வது ஓவரின் முடிவிலேயே 151 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகளை மட்டுமே கொடுத்தனர். இந்த போட்டி மிக விறுவிறுப்பாக சென்றது.

இந்த போட்டியில் வெற்றி பெற்று சென்னை இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது. அதனால் அவர் நாளை 12.05.19 அன்று மும்பையுடன் இறுதி போட்டியில் மோதுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here