ஷேவாக்கை போல ரிஷப் பண்ட்டையும் விட்டுருங்க…. முன்னாள் இந்தியவீரர் கருத்து…..

0
14

இந்த வருடம் ஐபிஎல் இன்னும் இரண்டு நாட்கள் தான், அத்துடன் முடிந்துவிடும். இன்று இரண்டாவது தகுதி சுற்று டெல்லிக்கும் சென்னைக்கும் நடைபெறுகிறது.

இந்த நிலையில் உலக கோப்பை பற்றிய சிந்தனைகள் பல இந்திய வீரர்களுக்கும், ரசிகர்களுக்கும், முன்னாள் இந்திய வீரர்களுக்கும் வந்துவிட தொடங்கி விட்டன. இதனால் பல குழப்பங்கள் ஏற்படுகிறது.

முன்னாள் இந்திய வீரரும், பிரபல கிரிக்கெட் வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் இளம் அதிரடி வீரர் ரிஷப் பண்ட் குறித்து புதிதாக ஒன்றை சொல்லி ரசிகர்களிடம் திட்டு வாங்கிகொண்டிருக்கிறார்.                 “ரிஷப் பண்ட், இந்த தலைமுறையின் வீரேந்தர் சேவாக். அவரை அவர் போக்கில் விட்டு விடவேண்டும். அவரை தேர்வு செய்யுங்கள் அல்லது  நீக்குங்கள், ஆனால் அவரை மாற்ற முயற்சி செய்யாதீர்கள்” என்று ட்விட்டரில் கூறியுள்ளார் சஞ்சய் மஞ்ச்ரேக்கர்.

முன்னாள் இந்திய வீரர் சேவாக் ஒன்று அடித்து ஆடுவார் அல்லது ஆட்டமிழந்து விட்டு செல்வார். தன் கிரிக்கெட் வாழ்வின் துவக்கம் முதல் கடைசி வரை அவர் அப்படியேதான்இருந்தார்.
அதனால் ரிஷப் பண்ட்டை அவர் வழியில் விட்டுவிட வேண்டும். அவர் விரைவாக ஆட்டமிழந்து செல்லும் போது, அவரை விமர்சிக்கக் கூடாது என்கிறார் சஞ்சய் மஞ்ச்ரேக்கர்.
ஆனால் ரிஷப் பண்ட ஆடுவதோ நான்காவது இடத்தில், ஷேவாக் ஆடுவதோ முதல் இடத்தில் அதனால் இது போன்ற திட்டம் மிகவும் தவறானதாக இருக்கும். அவர் சூழ்நிலையை புரிந்துஆடவேண்டும்.

ரிஷப் பண்ட சூழ்நிலையை புரிந்து ஆடுவதே மிகவும் சிறந்ததாக இருக்கும் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர். அதே போல் அவர் தனது வழக்கமான ஆட்டத்தையும் மாற்ற வேண்டியதில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here