பட்ஜெட் விலையில் அதிக அம்சங்களுடன் களம் இறங்க இருக்கும் Huwai P smart series

0
67

பட்ஜெட் விலைக்கு ஏற்றவாறு பாப்-அப் கேமரா வசதியுடன் ஹூவாய் நிறுவனம் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவுள்ளது. இதில் உள்ள வசதிகள், சிறப்பம்சங்கள் குறித்த விபரங்களை இங்கு காணலாம்.

ஸ்மார்ட்போன் தயாரிப்பில் முன்னனி நிறுவனங்களில் ஒன்றான ஹூவாய், அண்மையில் பி30 சீரிஸ் போன்களை அறிமுகம் செய்தது. இதையடுத்து தற்போது முதன்முதலாக பாப்அப் கேமராவுடன் கூடிய ஸ்மார்ட்போனை தயாரித்துள்ளது. இதற்கு Huwai P Smart Z என்று பெயரிடப்பட்டுள்ளது. இதன் அறிமுக தேதி குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளிவராத நிலையில், இதில் உள்ள சிறப்பம்சங்கள் தொடர்பாக தகவல் கசிந்துள்ளது. அதன்படி, நாட்ச் டிஸ்ப்ளே, கெரின் 710F சிப் செட் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய மதிப்புப்படி சுமார் 22 ஆயிரம் ரூபாய் விலை நிர்ணயிக்கப்படலாம்.

மேலும், 6.59 இன்ச் திரை அளவு, 16+2 மெகாபிக்சல் டூயல் கேமரா, 16 மெகா பிக்சல் பாப்அப் செல்பி கேமரா, 4ஜிபி ரேம், 64ஜிபி மெமரி இருக்கும் என்று கூறப்படுகிறது. டைப் சி சார்ஜ், 4,000 mAh பேட்டரி வசதிகளும் எதிர்பார்க்கப்படுகிறது. ஹூவாய் நிறுவனத்திடம் இருந்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளிவராத நிலையில், இணையத்தில் கசிந்த இந்த தகவலே ஹீவாய் P ஸ்மார்ட் Z மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here