டோனி தான் சிறப்பு…. கோலி வெறும் பருப்பு…. விமர்சனம் செய்த அந்த பயிற்சியாளர்….

0
74

VIVIO IPL 2019ல் இன்றுதகுதி சுற்றில் சென்னை அணியும் டெல்லி அணியும் மோதுகின்றன. இந்த போட்டியானது இன்று இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகும். இது 2வது தகுதிசுற்றாகும்.

இந்நிலையில் ஒரு கிரிக்கெட் பயிற்சியாளர் ஒருவர் கோலியை கேப்டன்சிப் செய்வதற்கு சரியான ஆள் இல்லை என்று கூறியுள்ளார். மேலும் டோனி இருப்பதால் தான் சிறப்பு என்றுள்ளார்.

ஒவ்வொரு போட்டியையும் முன்கூட்டியே கணிப்பதற்கு தோனியை போன்று  திறமை விராட் கோலியிடம் இல்லவே இல்லை என்று தோனியின் சிறு வயது பயிற்சியாளர் கேசவ் ரஞ்சன் பானர்ஜி கூறியிருக்கிறார்.             வரும் 30ம் தேதி தொடங்கி ஜூலை 14ம் தேதி வரை இங்கிலாந்தில் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. அணிகளின் வீரர்கள் பட்டியலும் கிட்டத்தட்ட வெளியிடப்பட்டு விட்டன. போட்டிக்கான ஏற்பாடுகளும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்திய அணியில் இடம் பெரும் வீரர்களின் பட்டியலும் அறிவிக்கப்பட்டு விட்டது. கோலியின் தலைமையில் 15 பேர் கொண்ட பட்டியல் வெளியிடப்பட்டு விட்டது.

4வது இடத்தில் ஆடுபவர் யார் என்கிற முடிவும் தெரிந்துவிட்டது.             கேப்டன் கோலி பற்றி தோனியின் சிறுவயது பயிற்சியாளர் கேசவ் ரஞ்சன் பானர்ஜி விமர்சித்துள்ளார்.

உலக கோப்பைக்கான இந்திய அணியில் தோனி இருப்பது மிகப்பெரிய பலம். அவருக்கு இருக்கும் தனித்திறமை, கேப்டன் கோலியிடம் இல்லை என்று கோலியை குறைகூறியுள்ளார்.

வித்தியாசமான அனுகுமுறையும், போட்டியின் போக்கை கூர்ந்து கவனிக்கும் திறனும், தோனியின் தனித்திறமையாகும். அது போன்ற திறமைகள் எதுவும் கோலியிடம் இல்லை.

இந்த டெக்னிக்குகளை உலக கோப்பை போட்டியில் தோனியிடம் இருந்து பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு கோலிக்கு கிடைத்திருக்கிறது. நடப்பு உலக கோப்பை தொடரில் தோனியை 4வது இடத்தில் களமிறக்க வேண்டும் என்று கேசவ் ரஞ்சன் பானர்ஜி தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதில் அனைத்தும் உண்மை தான். ஆனால் அவற்றை இப்படி கூறுவது தவறான விஷயம். ஆனால் எது எப்படி இருந்தாலும், டோனியின் திறமை இந்தியாவிற்கு தேவைதான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here