குழந்தைகளை குளிக்கவைகும் முறைகள்

0
52

குழந்தை வளர்ப்பு என்பது இன்றைய பெற்றோருக்கு பெரும் சவாலாக மாறியிருக்கிறது. ஏழெட்டுக் குழந்தைகளைப் பெற்று, சலிப்பில்லாமல் வளர்த்து ஆளாக்கிய மரபு நம்முடையது. ஆனால் இன்று, இரண்டு குழந்தைகளை வளர்த்தெடுப்பதற்குள் படாதபாடுபடுகிறார்கள். கூட்டுக் குடும்ப வாழ்க்கைமுறை நம்மைவிட்டு விலகியதாலும், பெற்றோர் இருவரும் வேலைக்குச் செல்வதாலும் குழந்தை வளர்ப்பு மேலும் சிக்கலாகியிருக்கிறது. “மற்றவர்களிடம் எப்படிப் பேசவேண்டும், பழகவேண்டும் என்றெல்லாம் அக்கறையாகச் சொல்லி வளர்க்கும் பெற்றோர் குழந்தைகளின் ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களில் போதிய அக்கறை காட்டுவதில்லை” என்கிறார்கள் மருத்துவர்கள். “அதனால் குழந்தைகள் பல்வேறு விதமான உடல்நலப் பிரச்னைகளுக்கு ஆளாகிறார்கள்” என்றும் அவர்கள் ஆதங்கப்படுகிறார்கள்.

குழந்தைகளைக் குளிப்பாட்டுவது முதல், அவர்களுக்கு எந்த வயதில் என்ன உணவைக் கொடுப்பது என்பதுவரை எல்லாவற்றிலும் பெற்றோருக்குக் கவனம் தேவை. பெரியவர்கள், குழந்தைகளைக் குளிப்பாட்டும்போது, காதுகளின் பின்புறம், கழுத்து மடிப்பு, அக்குள், இடுப்பு, பிறப்புறுப்பு ஆகிய பகுதிகளை நுட்பமாகச் சுத்தம் செய்வார்கள். குறிப்பாக, பிறப்புறுப்புப் பகுதிகள் சுகாதாரமாக இருக்கும்படி பார்த்துக்கொள்வார்கள். அது இயல்பாக இருக்கிறதா என்பதையும் கவனிப்பார்கள். இன்று, அதற்கெல்லாம் நமக்கு நேரமிருப்பதில்லை.

அதனால், நம்மையறியாமலே குழந்தைகள் பல பாதிப்புகளுக்கு ஆளாகி வருகிறார்கள். உதாரணமாக, ஆண் குழந்தைகளுக்கு பிறப்புறுப்பில் உண்டாகும் `பைமோசிஸ்’ எனப்படும் பாதிப்பு.

குளிப்பாட்டும் முறைகள் 

ஆண் குழந்தைகள் பிறந்து, ஆறு முதல் எட்டு மாதங்கள் வரை அவர்களது பிறப்புறுப்பின் நுனியில் சிறிய அளவில் தோல் வளர்ந்திருக்கும். காலப்போக்கில் அந்தத் தோல் கொஞ்சம், கொஞ்சமாகப் பின்னோக்கிப் போய்விடும். அப்படி போகாதபட்சத்தில் குழந்தையைக் குளிக்க வைக்கும்போது அந்தத் தோலை பின்னோக்கி இழுத்துவிடவேண்டும். முன்பெல்லாம் வீட்டில் இருக்கும் வயதானவர்கள் இவற்றையெல்லாம் சரியாகச் செய்தார்கள். ஆனால், இன்றைய இளம் பெற்றோருக்கு இவற்றில் போதிய விழிப்புணர்வு இல்லை. முக்கியமாகக் குழந்தையின் அப்பாதான் இதில் அக்கறையாக இருக்கவேண்டும். குழந்தைகளுக்கு இரண்டு பல் முளைத்ததும் பேஸ்ட்டும், பிரஷ்ஷும் கொடுத்துப் பழக்குவதைப்போல பிறப்புறுப்புச் சுகாதாரத்தையும் சொல்லித்தரவேண்டும்.

பிறப்புறுப்பின் நுனியில் உள்ள தோலை பின்னால் இழுத்து விடாவிட்டால், குழந்தை சிறுநீர் கழிக்கும் துவாரம் சிறுத்துப் போய்விடும். அந்த இடத்தில் `ஸ்மெக்மா’ என்ற மாவு போன்ற அழுக்குத் திரட்டு உருவாகும். தோல் பகுதி தொடர்ந்து மூடி இருக்கும்பட்சத்தில், அது சிறுநீருடன் கலந்து, தொற்றுகளை ஏற்படுத்தும். மாறாக, தோலைப் பின்னால் இழுத்து அடிக்கடி சுத்தம் செய்தால் பாதிப்புகள் எதுவும் வராது. தவறினால், தொற்றுகள் அதிகரித்து தோலின் நுனிப்பகுதி வெளுத்துப்போய் வெண்புள்ளி உண்டானது போன்று காணப்படும்.

`ஆண் குழந்தைகள் பிறந்து, ஆறு முதல் எட்டு மாதங்கள் வரை அவர்களது பிறப்புறுப்பின் நுனியில் சிறிய அளவில் தோல் வளர்ந்திருக்கும். காலப்போக்கில் அந்தத் தோல் கொஞ்சம், கொஞ்சமாகப் பின்னோக்கிப் போய்விடும். அப்படி போகாதபட்சத்தில் குழந்தையைக் குளிக்க வைக்கும்போது அந்தத் தோலை பின்னோக்கி இழுத்துவிடவேண்டும். முன்பெல்லாம் வீட்டில் இருக்கும் வயதானவர்கள் இவற்றையெல்லாம் சரியாகச் செய்தார்கள். ஆனால், இன்றைய இளம் பெற்றோருக்கு இவற்றில் போதிய விழிப்புணர்வு இல்லை. முக்கியமாகக் குழந்தையின் அப்பாதான் இதில் அக்கறையாக இருக்கவேண்டும். குழந்தைகளுக்கு இரண்டு பல் முளைத்ததும் பேஸ்ட்டும், பிரஷ்ஷும் கொடுத்துப் பழக்குவதைப்போல பிறப்புறுப்புச் சுகாதாரத்தையும் சொல்லித்தரவேண்டும்.

பிறப்புறுப்பின் நுனியில் உள்ள தோலை பின்னால் இழுத்து விடாவிட்டால், குழந்தை சிறுநீர் கழிக்கும் துவாரம் சிறுத்துப் போய்விடும். அந்த இடத்தில் `ஸ்மெக்மா’ (Smegma) என்ற மாவு போன்ற அழுக்குத் திரட்டு உருவாகும். தோல் பகுதி தொடர்ந்து மூடி இருக்கும்பட்சத்தில், அது சிறுநீருடன் கலந்து, தொற்றுகளை ஏற்படுத்தும். மாறாக, தோலைப் பின்னால் இழுத்து அடிக்கடி சுத்தம் செய்தால் பாதிப்புகள் எதுவும் வராது. தவறினால், தொற்றுகள் அதிகரித்து தோலின் நுனிப்பகுதி வெளுத்துப்போய் வெண்புள்ளி உண்டானது போன்று காணப்படும்.

காலப்போக்கில் வெண்புள்ளிகள் பிறப்புறுப்பு முழுவதும் பரவி, சிறுநீர் வரும் துவாரத்தைச் சுருக்கிவிடும். சிறுநீர் கழிக்கும்போது, அந்தப் பகுதி பலூன்போல விரிந்து சிரமப்பட நேரிடும்; அதிக நேரம் சிறுநீர் கழிக்கவும் நேரும். உள்துவாரம் மூடிவிடுவதால் `பேக் பிரஷர்’ என்ற பாதிப்பு ஏற்பட்டு, அது சிறுநீர்ப்பை முதல் சிறுநீரகம் வரை பாதிப்பை உண்டாக்கும்.

அதிகநேரம் சிறுநீர் கழிப்பது, மெல்லிய ஊசி போல சிறுநீர் கழிப்பது, பிறப்புறுப்புத் தோலின் நிறம் மாறியிருப்பது, சிறுநீர் கழிக்கும்போது முன்பகுதி பலூன் போல வீங்குவது போன்றவைதான் `பைமோசிஸ்’ பாதிப்பின் அறிகுறிகள். இந்த அறிகுறிகள் குழந்தைகளுக்குத் தென்பட்டால் உடனடியாக அவர்களை மருத்துவரிடம் அழைத்துச் செல்லவேண்டும். மருத்துவர், தோல் பின்னோக்கி போவதற்குரிய `ஸ்டெராய்டு’ மருந்துகளைத் தருவார்கள். அதைப் பிறப்புறுப்பில் தடவினால் தோல் பின்னோக்கிச் செல்லும். ஒவ்வொருமுறை குளிக்கவைக்கும்போதும், தோலைப் பின்னால் இழுத்து சுத்தம் செய்யவேண்டியது அவசியம்.

ஸ்டெராய்டு மருந்துகளால், தோல் சரியாகவில்லையென்றால், `முன் தோல் நீக்க அறுவை சிகிச்சை’ (Circumcision) செய்யவேண்டும். அதன்பிறகு குழந்தைகள் சிறுநீர் கழிப்பதில் எந்தப் பிரச்னையும் இருக்காது. குளிக்கும்போது தானாகவே முன்பகுதி சுத்தமாகிவிடும். மருந்து, மாத்திரைகள் எதுவும் சாப்பிடத் தேவையில்லை. முன் தோலை நீக்கினால், பிறப்புறுப்பில் உணர்ச்சி குறைந்துவிடும் என்ற தவறான நம்பிக்கை இருக்கிறது; அது தவறு. தோலை நீக்கினால், எந்தப் பாதிப்பும் ஏற்படாது. இதுதவிர பிற்காலத்தில் உறுப்பின் வளர்ச்சியிலோ, தாம்பத்யத்திலோ எந்த பாதிப்பும் ஏற்படாது.

ஆண் குழந்தைகளுக்கு இரண்டு விரைகளும் சரியாகக் கீழே இருக்கிறதா, சமமான அளவில் இருக்கிறதா என்பதை அவர்களைக் குளிக்க வைக்கும்போது பெற்றோர் கவனிக்கவேண்டும். சிலநேரங்களில் வயிற்றுக்குள் விரைகள் தங்கிக்கொள்ளும். அப்படி இருந்தால் மருத்துவரிடம் உடனடியாக கூட்டிச்செல்வது நல்லது.

ஆண் குழந்தைகளைப் போலவே, பெண் குழந்தைகளுக்கும் உள்தோல் ஒட்டிக் கொள்ளும்  பாதிப்பு ஏற்படும். ஹார்மோன் குறைபாடுகள்தான் அதற்குக் காரணம். குழந்தைகளை மருத்துவரிடம் அழைத்துச்செல்லும்போது இதையும் பரிசோதிக்கச் சொல்லவேண்டும். பாதிப்புகள் இருந்தால் மருத்துவர்கள் அதற்குரிய மருந்துகளைப் பரிந்துரைப்பார்கள். அறுவை சிகிச்சை செய்யுமளவுக்கு அவசியம் ஏற்படாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here