ஒருவரின் ஆடு காணாமல் போனதாம்…. கண்டுபிடித்தால் ரூ.25ஆயிரம் சன்மானம்….

0
72

மனிதர்கள் காணாமல் போனால் கூட யாரும் காணவில்லை என்று போஸ்டர் ஓட்டுவது தற்போது கிடையாது. ஆனால் ஒருவர் தனது ஆடு காணாமல் போனதை போஸ்டர் அடித்து தேடுகிறார்.

அந்த ஆடு அவரது மகன் போலவாம். அந்த ஆட்டினை அவர் தன்னுடைய பெற்றெடுக்காத மகனாக வளர்த்துவந்தாராம். அந்த ஆட்டினை கண்டுபிடித்தால் ரூ.25 ஆயிரம் சன்மானம் தரப்படுமாம்.

சென்னைய அடுத்த சிங்கப்பெருமாள் கோவில் சுற்று வட்டாரத்துல ஒட்டியிருக்குற, காணவில்லை போஸ்டர்ல ஒரு ஆட்டு கிடாவோட படம் இருக்கு. அந்த ஆடு தான் ராமு.
அந்த போஸ்டர்ல காணவில்லைன்ற தலைப்புல நான் பெற்றெடுக்காத பிள்ளை கே.எம்.ராமுன்னு போட்டு இந்த கிடாவை தேடி தான் அதோட உரிமையாளர் ஊர் முழுக்க போஸ்டர் அடிச்சு ஒட்டியிருக்காரு. அதுல அவர் சொல்லியிருக்கிற விஷயம் தான் வினோதமா இருக்கு.               “K.M.ராமு பத்து ஆண்டுகளா ஸ்ரீமுத்துமாரியம்மன் கோவிலுக்கு நேர்ந்து விடப்பட்ட கடா. இவன் காணாம போனதிலிருந்து தனக்கு உயிர் கொஞ்சம் கொஞ்சமா போய்க்கொண்டு உள்ளது.என் மகனை பற்றி தகவல் தந்தாலோ, கண்டுபிடித்து  கொடுத்தாலோ ரூ.25 ஆயிரம் சன்மானமாக வழங்கி எனது உடம்பில் உள்ள எந்த பாகத்தை தானமா கேட்டாலும் தர்றேன்னு” சத்தியம் பண்ணியிருக்காரு.

இந்த போஸ்டர் பற்றி தான் தற்போது அங்கு பரபரப்பாக பிசப்பட்டு வருகிறது. இந்த ஆடின் உரிமையாளர் அவன் மீது மிக அதிகமாக பாசம் வைத்துள்ளது இதன் மூலம் தெரிகிறது.

கடந்த 9 வருஷமா ரொம்ப பாசமா தன் பிள்ளைகள விட செல்லமா கிடா ராமுவை வளர்த்துருக்காரு. அவர் சிங்கப்பெருமாள் கோவில் முத்துமாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த கே.முருகன்.
அவன பாத்துட்டு போனாலே அவ்ளோ நல்லது நடக்கும். அவன் தலையில கை வச்சு வேண்டிக்கிட்டா நெனச்சது நடக்கும்னு சொல்றாங்க அந்த ஊர் மக்கள். அவ்வளவு சிறப்பு மிக்கது அந்த ஆடு.
போலீஸ நம்பி பலனில்லன்னு, ராமுவை பத்தின தகவலோட ஊர் முழுக்க போஸ்டர் அடிச்சி ஒட்டிட்டாரு. போஸ்டர பாத்த சில பேர் முருகனோட சேர்ந்து ராமுவை தேடிகிட்டு இருக்காங்க.
அவருடைய ஆடு மற்றவர்களின் ஆடுகளை விட வித்தியாசமானது என்று தான் அனைவரும் கூறுகின்றனர். இந்த ஆடு கிடைப்பதற்கு அனைவரும் சற்று உதவி செய்ய வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here