வீட்டு வேலைக்காரரை அடித்த நடிகர் பார்த்திபன்….. போலீஸ் விசாரணை செய்கின்றனர்….

0
68

தற்போது தமிழ்நாட்டில் இடைத்தேர்தல் வருவதால் அனைவரும் இடைத்தேர்தல், மற்றும் ஐபிஎல் போன்றவற்றில் பிசியாக இருக்கினறனர். இந்த கப்பில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

அது என்ன சம்பவம்னு பாத்திங்கனா நம்ம நடிகர் பார்த்திபன் செய்த ஒரு சிறப்பான சம்பவம் தான். அவர் தனது வீட்டு வேலைக்காரரை அடித்துள்ளார். அவர் போலீசில் புகார்அளித்துள்ளார்.

நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் வீட்டில் வேலை பார்த்துவருபவர் தான் ஜெயங்கொண்டான். அவர் தான் பார்த்திபன் மீது நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.                பார்த்திபன் வீட்டில் வேலை செய்து வந்தவர் ஜெயங்கொண்டான். திருவான்மியூரில் உள்ள பார்த்திபனின் வீட்டில் ஏற்கனவே ஓர் திருட்டு சம்பவம் நடந்தது.

இந்த நிலையில் தான் ஜெயங்கொண்டான் பணியில் இருந்து நீக்கப்பட்டார். இதற்கான காரணத்தையும் அவர் கூறவில்லை. அந்த வேலைக்காரர் போலீசில் பார்த்திபன் தன்னை அடித்ததாக புகார்அளித்துள்ளார்.
அவர் கூறிய புகாரில் பார்த்திபன் தன்னை பணியில் இருந்து நீக்கியதாகவும், ஏன் என்று கேட்டதற்கு தன்னை அடித்து மாடியில் இருந்து கீழே தள்ளியதாகவும் புகார் தெரிவித்துள்ளார்.

இந்த புகார் குறித்து பார்த்திபன் அல்லது அவரது தரப்பில் இருந்து கூட எந்த ஒரு பதிலும் வரவில்லை. பார்த்திபன் குறித்து வந்துள்ள இந்த செய்தி அவருக்கு ஒரு சரிவை ஏற்படுத்தும்.

ஆனால் உண்மையில் அவர் அந்த வேலைக்காரரை அடித்தாரா என்பது தெரியவில்லை. இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். கூடியவிரைவில் உண்மை தெரியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here