பூட்டு போட்டு பூட்டி வைத்திருந்த ரஜினி மக்கள் மன்றத்தின் தண்ணீர் பந்தல்…. என்னடா இது…..

0
75

தற்போது கோடைகாலம் என்பதால் வெயில் மக்களை சுட்டெரிக்கிறது. இந்த வெயில் இன்னும் அதிகமாககூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெர்வித்து வருகிறது.

இந்த கோடை காலத்தில் தண்ணீர் என்பது ஒரு முக்கியமான ஒன்றாகும். சில நகரங்கள், கிராமங்களில் ஏற்கனவே தண்ணீர் தட்டுப்பாடு வந்துவிட்டது. இந்தநிலையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

வெயில் காலத்தில் பல கட்சிக்காரகளும், தொண்டு நிறுவனங்களும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல் அமைப்பது வழக்கம் தான். ஆனால் அதை சரியாக செய்வது என்பது மிக முக்கியமான ஒன்றாகும்.          ரஜினிகாந்த் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் அவர் தேவையில்லாமல் சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்படுகிறார்.

அதற்கான காரணம் என்னவென்றால் காஞ்சிபுரத்தில் அவரது ரசிகர்கள் செய்த சம்பவம் தான். காஞ்சிபுரம் மாவட்டம் பம்மலில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் தண்ணீர் பந்தல் வைத்தது தான் பிரச்சனை ஆகிவிட்டது.

அது என்னவென்றால் அந்த ஊரைச்சேர்ந்த ரஜினி மக்கள் மன்றத்தினர் ஒரு தண்ணீர் பந்தலை வைத்து அதனை ஒரு சிறிய இடத்தில் வைத்து அடைத்து பூட்டு போட்டு வைத்துள்ளனர்.

தண்ணீர் பந்தலில் குடிப்பதற்கு தண்ணீர் வைத்துள்ளவர்கள் அந்த அறையை பூட்டி வைத்திருந்தாள் மக்கள் எப்படி தண்ணீர் குடிப்பார்கள். அதனால் ரஜினி விமர்சனம் செய்யப்பட்டு வருகிறார்.

ஆனால் அதை யாரோ புகைப்படம் எடுத்து ட்விட்டரில் வெளியிட்டுவிட்டனர். அந்த புகைப்படத்தை பார்த்தவர்கள் தான் ரஜினியை கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் ரஜினி இந்த தவறை செய்யவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here