பாகிஸ்தான்காரர்களுக்கு ஹோட்டலில் இடம் இல்லை…. என்ன நடக்குது இங்க….

0
77

இந்தியாவில் 2019 மக்களவை தேர்தல் மிகவும் தீவிரமாக நடக்கிறது. இந்த தேர்தலில் அனைத்து கட்சிக்காரர்களும் மிக அருமையாக பணியாற்றுகின்றனர். இந்த நிலையில் ஒரு செய்தி வந்துள்ளது.

எதிரியாக இருந்தாலும் வீட்டுக்குள் வரவைத்து அன்புடன் பழகுவது தான் தமிழர் மரபு. ஆனால் அந்த மரபு உத்திர பிரதேசத்தில் இருப்பவர்களுக்கு கிடையாது என்பது போல ஒன்று நடந்துள்ளது.

அது என்னவென்றால் பாகிஸ்தானியர்களுக்கு அறைகள் வழங்கப்படமாட்டாது என உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் அதிரடியான ஒரு அறிவிப்பு ஒட்டப்பட்டுள்ளது.                ஹோட்டல் மிலன், உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாதில் பிரயக்ராஜில் உள்ளது. இங்கு தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.இங்கு வெளியே ஒரு அறிவிப்பு தாள்  ஒட்டப்பட்டுள்ளது.

அந்த அறிவிப்பு தாளில், entry of pakistani nationals restricted என்று ஒட்டப்பட்டுள்ளது. அதாவது பாகிஸ்தான் மக்களுக்கு இந்த ஹோட்டலில் இடம் இல்லை என்று கூறியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து அந்த ஹோட்டல் மேலாளரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அவர் இது குறித்த ஒரு விளக்கம் தந்தார். அது அனைவருக்கும் ஆச்சரியமாக இருந்தது.

இதுகுறித்து அந்த ஹோட்டலின் மேனேஜர் கூறுகையில், புல்வாமா தாக்குதலுக்கு பிறகு இந்த நோட்டீஸை நாங்கள் வைத்துள்ளோம். பாகிஸ்தான் நாட்டவர் யாரும் இங்கு வரக்கூடாது என்றார்.
அப்படியே வந்தாலும் அவர்களுக்கு அறைகளை நாங்கள் ஒதுக்கித் தர மாட்டோம். புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக நாங்கள் இந்த வகையில் எங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்துகிறோம் என்றார்.
அந்த ஹோட்டல் மேனேஜர் மிகுந்த நாட்டு பற்று உள்ளவராக இருந்தாலும் அவர் இது போன்று செய்வது சற்று மனிதாபி மானத்திற்கு குறைவை உண்டாக்கும் ஒரு செயாலாகத்தான் இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here