எலிமினேட்டர் சுற்றில் தோல்வியடைந்ததால் கண்ணீர் விட்டு அழுதார் ஹைதராபாத் கோச்…..

0
70

VIVO IPL 2019 தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் டெல்லி மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதின. இந்த போட்டியானது எலிமினேட்டர் சுற்று என்பதால் விறுவிறுப்பாக சென்றது.

இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தோல்வி அடைந்ததைத் தாங்க முடியாமல் அந்த அணியின் பயிற்சியாளர் டாம் மூடி கண்ணீர் விட்டு அழுத காட்சிபார்க்க பரிதாபமாக இருந்தது.
கடந்த ஆண்டு ஐபிஎல் இறுதிப் போட்டி வரை முன்னேறிய சன்ரைசர்ஸ் அணி, இந்த ஆண்டு ஐபிஎல் லீக் சுற்றின் கடைசி சில போட்டிகள் மட்டுமே வெற்றிபெற தவறிவிட்டனர்.

அந்த கடைசி சில போட்டிகளை தவிர மற்ற போட்டிகளில் அந்த அணிக்கு தூணாக விளங்கினர் டேவிட் வார்னர் – ஜானி பேர்ஸ்டோ. அவர்கள் உலக கோப்பைக்காக தங்களது நாட்டிற்கு சென்றுவிட்டனர்.                நேற்று நடைபெற்ற இந்த வெளியேற்றுதல் சுற்றில் முதலில் டாஸ் வென்று பௌலிங்கை தேர்வு செய்தது டெல்லி அணி. முதலில் ஹைதராபாத் அணி பேட்டிங் செய்தது.

ஹைதராபாத் அணி டேவிட் வார்னர் மற்றும் ஜானி பர்ஸ்ட்ரோ இல்லாமல் தடுமாற்றம் கண்டனர். அதிகபட்சமாக மார்டின் குப்டில் 36 ரன்கள் அடித்தார். மற்றபடி ஒன்றும் பெரிய அளவுக்கு இல்லை.

ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 162 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்திருந்தனர். அவர்களுக்கு இந்த ஸ்கோர் நிச்சயம் போதவில்லை என்பது தான் உண்மை.

அடுத்தது களம் இறங்கிய டெல்லி அணி ஆரம்பத்திலேயே மிகவும் அருமையாக விளையாடினர். அதிகபட்சமாக ப்ரித்வி ஷா 56 ரன்கள் எடுத்தார். ரிஷப் பண்ட் சூப்பராக விளையாடினார்.

டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழந்து 165 ரன்கள் எடுத்து அந்த போட்டியை வெற்றிபெற்றனர். நாளை டெல்லியும் சென்னையும் அடுத்த தகுதி சுற்றில்விளையாடவுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here