என்னடா டீம் எடுத்திருக்கிங்க…. பெங்களூர் அணியை குறை சொல்லும் அணில் கும்ப்ளே…

0
67

இந்த வருடம் ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணி வழக்கம் போல சரியாக ஆடவில்லை. அதனால் போன வருடம் போல இந்தவருடமும் பெங்களூர் அணி ப்ளே ஆபிற்கு வராமல்சென்றுவிட்டனர்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் கேப்டன் கோலியின் தலைமையில் விளையாடியும் நடப்பு ஐபிஎல் தொடரில் மிக மோசமான செயல்பாடுகளால் பிளே-ஆஃப் செல்லும் வாய்ப்பை இழந்தது.

இந்த நிலையில் முன்னாள் இந்திய அணி வீரர் அனில் கும்ப்ளே இந்த ஆண்டு பெங்களூர் அணி எங்கே சறுக்கியது என்பது குறித்து தன்ன்னுடைய கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.மோசமான அணித் தேர்வு என்பது இதற்கு முக்கிய காரணம் என கூறுகிறார் அனில் கும்ப்ளே. பெங்களூர் அணி பல போட்டிகளில் மூன்று வெளிநாட்டு வீரர்களை மட்டுமே பயன்படுத்தியது ஒரு குறையாக உள்ளது.

பெங்களூர் புதிதாக தேர்வு செய்த ஷிம்ரான் ஹெட்மயர், ஷிவம் துபே, அக்ஷ்தீப் நாத் உள்ளிட்ட இளம் வீரர்களை இந்த ஆண்டு தொடர்ந்து சிறப்பாக செயல்படவில்லை என்பதும் சறுக்கல்தான்.

வெற்றிகள் வந்துகொண்டிருந்த சூழ்நிலையில் உலகக்கோப்பை தொடருக்கு தயாராக வேண்டி மொயீன் அலி, மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் ஆகியோர் தங்கள் நாட்டுக்கு திரும்பியது ஒரு சறுக்கலாகஇருந்தது.

இது போன்ற பல சறுக்கல்களால் தான் இந்த வருடம் பெங்களூர் அணி ப்ளே ஆப் கூட வரமுடியாம போனதுக்கு காரணம் என்று அணில் கும்ப்ளே கருத்தை தெரிவித்தார்.

பெங்களூர் அணி அடுத்த முறையாவது வெற்றி பெற வேண்டும் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர். ஆனால் அவர்களால் ஏன் அது முடியவில்லை என்று தெரியவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here