இந்திய மாணவர்கள் அணி மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் சாதனை

0
77

மைக்ரோட்சாப்ட் நிறுவனம் நடத்திய இமேஜின் கோப்பை உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த அணி 2வது இடத்தைப் பிடித்துள்ளது.

அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள சியாட்டில் நகரில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இமேஜின் கோப்பை உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி மே 6ஆம் தேதி நடைபெற்றது.

இதில் இந்தியாவிலிருந்து பரீதாபாத் நகரில் உள்ள மனவ் ரச்னா ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த பதானா, வாசு கௌசிக், பாரத் சுண்டல் ஆகிய மூன்று மாணவர்கள் கொண்ட குழு உருவாக்கிய Caeli என்ற கருவிக்கு இரண்டாவது பரிசு கிடைத்துள்ளது. இது சுவாசிக்கும் காற்றை சுத்தமாக்கி சிரமம் இல்லாமல் மூச்சுவிட உதவுகிறது. குறிப்பாக ஆஸ்துமா மற்றும் நாள்பட்ட சுவாசக் கோளாறு கொண்டவர்களுக்கு இந்த கருவி மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று அவர்கள் கூறுகிறார்கள்.

தலைநகர் டெல்லி உட்பட வட இந்தியப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு ஏற்படும் சுவாசப் பிரச்னைக்கு இந்த கருவி தீர்வாக இருக்கும் எனவும் அவர்கள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.

கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்றுவரும் மைக்ரோசாப்ட் நடத்தும் இப்போட்டியில் 190 நாடுகளைச் சேர்ந்த 16.5 லட்சம் மாணவர்கள் கலந்துகொண்டிருக்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here