கொளுத்தும் வெயிலில் உங்கள் குழந்தைகளை எப்படி பராம்மரிப்பது-…..

0
281

கோடைக்காலத்தில் குழந்தைகளைப் பராமரிப்பதுதான் சவால். பெரியவர்களே வெம்மையால் வெதும்பிவிடும் நிலையில் குழந்தைகள் மீது கூடுதல் கவனம் செலுத்தவேண்டியிருக்கும். வெயில் காலத்தில் நீர்ச்சத்து இழப்பால் குழந்தைகள் பாதிப்புக்குள்ளாவார்கள். தவிர, உணவு வழியாகப் பரவும் நோய்களும் குழந்தைகளை வதைக்கக்கூடும்.

கோடை காலத்தில் குழந்தைகளை எப்படி பரம்மரிக்க வேண்டும்

கோடையில் உணவின்மூலம் பரவி குடலைப் பாதிக்கும் நோய்கள்தான் குழந்தைகளை அதிகமாகப் பாதிக்கும். குறிப்பாகச் சீதபேதி, டைபாய்டு, ஹெப்படைட்டிஸ் சி போன்றவை ஏற்படலாம். இவற்றைத் தடுக்க குழந்தைகளுக்கு வீட்டில் தயாரித்த உணவுகளையே சாப்பிடக்கொடுங்கள். கடைகளில் வாங்கும் உணவுகளைக் கூடுமானவரை தவிர்த்துவிடுங்கள்.

டைபாய்டு, ஹெப்படைட்டிஸ் சி ஆகிய இரண்டு நோய்களுக்கும் தடுப்பூசிகள் உள்ளன. 2 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவரின் ஆலோசனையின் பேரில் இந்தத் தடுப்பூசிகளைப் போடலாம். வழக்கமான தடுப்பூசி அட்டவணையில் இந்த இரண்டு ஊசிகளும் உண்டு. ஏதேனும் காரணங்களால் போடாமல் தவிர்த்திருந்தால், தற்போது இந்தத் தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்ளலாம்.

குழந்தைகளுக்கான உணவுகளை வீட்டில் தயாரிக்கும்போது அதிக அளவில் காய்கறிகள், பழங்களைச் சேர்த்துக்கொள்ளவேண்டும். குறிப்பாக, வெள்ளரிக்காயை அதிக அளவில் உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும். வெள்ளரிக்காயில் 95 முதல் 96 சதவிகிதம் வரை நீர்ச்சத்து உள்ளது. கேரட், பீட்ரூட், பூசணிக்காய் போன்ற காய்கறிகளிலும் குழந்தைகளைக் கவரும் வகையில் விதவிதமான உணவுகளைச் செய்துகொடுக்கலாம்.

பழங்களில் 96 சதவிகிதம் நீர்ச்சத்துள்ள தர்பூசணியை வெயில் நேரங்களில் குழந்தைகளுக்கு சாப்பிடக் கொடுக்கலாம். இதுதவிர, கிர்ணி, ஸ்ட்ராபெர்ரி (92 சதவிகிதம் நீர்ச்சத்து உள்ளது), பீச், வாழைப்பழம், ஆப்பிள், ஆப்ரிகாட், நுங்கு போன்ற பழங்களையும் குழந்தைகளுக்கு அதிகம் சாப்பிடக் கொடுக்கவேண்டும். பகல் பொழுதுகளில் ஃப்ரெஷ்ஷாக வெட்டிய இளநீரை குடிக்கக் கொடுக்கலாம். தயிரை உணவில் சேர்த்தோ, மோராகக் கடைந்தோ, சிறிது சர்க்கரை சேர்த்து லஸ்ஸியாகவோ கொடுக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here