தீ பிடித்து எரிந்த சாம்சங் மொபைல்; பணத்தை திருப்பி கொடுக்காமல் ஏமாற்றும் நிறுவனம்

0
76

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி S10 மொபைல் தீப்பிடித்து எரிந்து நாசமானதற்கு அதன் வாடிக்கையாளருக்கு இழப்பீடு தர மறுத்துள்ளது. தென் கொரியாவைச் சேர்ந்த சாம்சங் நிறுவனம் தனது விலை உயர்ந்த மொபைலான கேலக்ஸி எஸ்10 என்ற 5ஜி மொபைலை ஏப்ரல் 5ஆம் தேதி வெளியிட்டது. உலகிலேய முதல் 5G மொபைல் இதுதான் எனவும் அறிவித்துக்கொண்டது.

இந்த மொபைலை வாங்கிய லீ என்ற வாடிக்கையாளர் மொபைல் திடீரென தீப்பற்றி எரிந்ததாக புகார் கூறியுள்ளார். மேஜை மீது எந்த இடையூறும் இல்லாத நிலையில் வைக்கப்பட்டிருந்த மொபைல் தீப்பற்றி எரிந்தது எனவும் எந்த காரணமும் இல்லாமல் தானாவே தீப்பிடித்துவிட்டது எனவும் அவர் தெரிவித்திருந்தார். இதனை விசாரித்த சாம்சங் நிறுவனம் கேலக்ஸி S10 மொபைலின் உள்ளே எந்த கோளாறு ஏற்பட்டு தீப்பிடிக்கவில்லை எனவும் வெளியிலிருந்து ஏதோ தாக்கத்தால் நிகழ்ந்திருக்க வேண்டும் எனவும் பதில் சொல்லியிருக்கிறது.

அதுமட்டுமின்றி, 1,200 டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 83,500 ரூபாய்) பணத்தை வாடிக்கையாளருக்குத் திருப்பிக்கொடுக்கவும் மறுத்துவிட்டது. ஏற்கெனவே, மூன்று ஆண்டுகளுக்கு முன் சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 7 மொபைல் உலகின் பல இடங்களில் தீப்பற்றியதால், அவை அனைத்தையும் திரும்பப் பெற்றுக்கொண்டது நினைவுகூரத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here