திரிஷாவின் 60வது படத்தின் டிரைலர் வெளியீடு…. அவரது பிறந்தநாள் பரிசு…..

0
274

நடிகை த்ரிஷா தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்துள்ளார். இன்று அவரது 36வது பிறந்த நாள் ஆகும். அவரது பிறந்த நாள் பரிசாக அவரது படத்தின் டிரைலர்வெளியிடப்பட்டுள்ளது.

நடிகை த்ரிஷா தமிழ் படங்களில் பலருடைய மனதையும் கவர்ந்துள்ளார். நயன்தாராவிற்கு உள்ளதை போல இல்லை என்றாலும் அவருக்கும் ரசிகர்பட்டாலம் உண்டு.

நடிகர் விஜய் சேதுபதி, திரிஷாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்த பரமபதம் விளையாட்டு படத்தின் டிரெய்லரை வெளியிட்டுள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் 20 வருடங்களுக்கும் மேலாக நாயகியாகவே நடித்து வருபவர் என்ற பெருமைக்குரியவர் நடிகை திரிஷா. ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, சிம்பு என பல பிரபலங்களுடன் இணைந்துநடித்துள்ளார். இன்றைய முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்தவர் என்ற சிறப்பும் இவருக்கு உண்டு. தற்போது இளம் நாயகிகளுக்கு போட்டியாக ஒரே நேரத்தில் நான்கு படங்களில் நடித்து வருகிறார்.
அவற்றில் ஒன்றுதான் ஆக்ஷன், த்ரில்லர் நிறைந்த ‘பரமபத விளையாட்டு’. நந்தா துரைராஜ், ஏ.எல்.அழகப்பன், வேல ராமமூர்த்தி, சாம்ஸ், இமான் அண்ணாச்சி, சோனா உள்பட பலர் நடித்துள்ளனர்.
அம்ரிஷ் இசையமைத்துள்ள அப்படத்தை திருஞானம் இயக்கியுள்ளார். இந்த படத்தை 24ஹவர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. நடிகை த்ரிஷா இன்று அவரது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
இந்த பிறந்த நாளுக்கு பரிசளிக்கும் விதத்தில் அவர் நடித்து வரும் பரமபதம் படத்தின் டிரைலரை வெளியிட்டு த்ரிஷாவிற்கு பரிசளித்துள்ளார். 96 ஜானுவுக்கு, ராம் தரும் பரிசு இது என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
ஒரு இரவில் காட்டுக்குள் நடக்கும் சம்பவங்களே கதை மற்றும் இது ஒரு ஒரு அரசியல் திகில் கலந்த படம். மேலும் தற்போது உருவாகி வரும் பரமபதம் விளையாட்டு திரிஷாவின் 60வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தில் த்ரிஷாவின் நடிப்பு மிகவும் மையம் படுத்தப்பட்டுள்ளதால் இந்த படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த படம் கூடிய விரைவில் வெளிவரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here