வாட்ஸ் அப்பில் வந்து விட்டது புதிய அப்டேட் …….

0
80

கிரிக்கெட் ரசிகர்களுக்காக வாட்ஸ்அப்பில் தற்போது ஐ.பி.எல் ஸ்டிக்கர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.

எமோஜி, ஸ்மைலியை தொடர்ந்து வாட்ஸ்அப் செயலியில் ஸ்டிக்கர்கள் அனுப்பும் வசதி கடந்தாண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதன் மூலம் பயனாளர்கள் தங்களுடைய நண்பர்களுக்கும், வாட்ஸ்அப் குரூப்பிற்கும் ஸ்டிக்கர்களை அனுப்பி கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இது போக வாட்ஸ்அப் ஸ்டிக்கர்களுக்கு என்றே பிரத்யேகமாக கூகுள் ப்ளே ஸ்டோரில் சில ஆப்கள் உள்ளன. அவற்றில் வடிவேல், கவுண்டமணி, இன்னும் சில பிரபலங்கள் போட்டோக்கள் ஸ்டிக்கராக உருவாக்கப்பட்டு டிரெண்டிங்கிற்கு உதவின.

whatsapp ஸ்டிக்கர் பயன்படுத்துவது எப்படி

இதையடுத்து பயனாளர்கள் தங்களுடைய போட்டோவையே ஸ்டிக்கராக மாற்றும் செயலியும் வரத்தொடங்கின. போட்டோவின் பேக்கிரவுண்ட் மட்டும் ரிமூவ் செய்து விட்டு அவற்றை நண்பர்களுக்கு அனுப்பலாம். இவ்வாறு வாட்ஸ்அப்பில் அவ்வபோது அப்டேட்டுக்கள் வந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில், தற்போது இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரை முன்னிட்டு, ஐ.பி.எல்., தொடர்பாக பிரத்யேகமாக ஸ்டிக்கர்கள் வாட்ஸ்அப் செயலியில் உருவாக்கப்பட்டுள்ளது. இது வாட்ஸ்அப் 2.19.115 வெர்ஷனில் உள்ளது. பயனாளர்கள் தங்களுடைய வாட்ஸ்அப்பை அப்டேட் செய்வதன் மூலம் இந்த வசதியை பெறலாம். முதற்கட்டமாக ஆண்ட்ராய்டு வாட்ஸ்அப் பதிப்பில் மட்டும் ஐ.பி.எல் ஸ்டிக்கர் கொண்டு வரப்பட்டுள்ளது. விரைவில் ஐ.ஓ.எஸ் தளத்தில் கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here