வாகனம் ஓட்டும் பொது நீங்கள் போதைபொருள் பயன்படுத்துவிர்களா…..இதோ அதற்கான விடை

0
73

வாகன ஓட்டிகள் மத்தியில் செய்யப்பட்ட சமீபத்திய ஆய்வு ஒன்றில், வாகனம் ஓட்டும்போது பலரும் போதைப் பொருள்களைப் பயன்படுத்தியது தெரியவந்துள்ளது. உடன் குழந்தைகள் இருந்தாலும்கூட, அதைப் பொருட்படுத்தாமல் போதைப்பொருளை ஓட்டுநர்கள் பயன்படுத்துகின்றனர் என்கிறது அந்த ஆய்வு முடிவு.

அமெரிக்காவைச் சேர்ந்த தொண்டு நிறுவனமான `நெடுஞ்சாலை பாதுகாப்புக்கான காப்பீட்டு நிறுவனம்’ சார்பில் ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வின்போது, நெடுஞ்சாலைகளில் வாகனம் ஓட்டும் 2,056 பேரிடம், அவர்கள் வாகனம் ஓட்டும்போது சோதனை செய்யப்பட்டது. அப்போது அவர்களுக்கு, மூச்சுப் பரிசோதனையும் அவர்களது எச்சிலை அடிப்படையாகக் கொண்டும் சில பரிசோதனைகள் செய்யப்பட்டன. அத்துடன் ரத்தப் பரிசோதனை செய்யப்பட்டு அதை அடிப்படையாகக் கொண்டு உடலில் போதையின் அளவு கணக்கிடப்பட்டது. ஆய்வின் முடிவில், `ஜர்னல் ஆப் ஸ்டடிஸ் ஆன் ஆல்கஹால் அண்ட் டிரக்ஸ்’ என்ற இணையதளத்தில் பகிரப்பட்டது.

ஆய்வின்போது, வாகனம் ஓட்டும்போது அந்த ஓட்டுநர்களில் 18 சதவிகிதம் பேர் கஞ்சா போன்ற போதைப்பொருள்களை பயன்படுத்தி இருப்பதும்,  4.5 சதவிகிதம் பேர் மது அருந்தியதும் தெரியவந்தது. வண்டியில் குழந்தை இருந்தாலும்கூட, 14 சதவிகிதம் பேர் கஞ்சா பயன்படுத்தியிருப்பதும், 0.2 சதவிகிதம் பேர் மது அருந்தியதும் தெரியவந்துள்ளது. ஆனாலும் இதுபோன்ற போதைப்பொருள்களின் பயன்பாட்டால் ஏற்படும் விபத்து சதவிகிதம் எவ்வளவு என்பது குறித்த விவரங்கள், தரவுகள் எதுவும் ஆய்வில் சேகரிக்கப்படவில்லை.

அதிலுள்ள போதையின் அளவு என்ன என்பதைப் பொறுத்தே விபத்து ஏற்படும் விகிதம் அமைகின்றன என்பதால், வாகன ஓட்டுநர்கள் கூடுதல் கவனத்துடன் செயல்படவேண்டும் என்ற ஆய்வாளர்கள் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் உடனிருக்கும் உயிர்களை மதித்துச் செயல்பட வேண்டும் என்ற அறிவுரையும் வழங்கப்பட்டுள்ளது.

அனைத்துப் பின்விளைவுகளும் தெரிந்தும்கூட, போதைப்பொருள்களைப் பயன்படுத்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள், குறைந்தபட்சம் தலைச்சுற்றல், பார்வை மங்குதல் போன்ற பக்கவிளைவுகள் ஏற்படும் போதாவது வாகனம் ஓட்டுவதை உடனடியாக நிறுத்தவேண்டும் எனப் பரிந்துரைத்துள்ளனர் ஆய்வாளர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here