ஆரோக்கியம் அளிக்கும் காளான் மிளகு வறுவல்…

0
29

என்னென்ன தேவை?

காளான் – 200 கிராம்,

வெங்காயம் – 2,

நறுக்கிய பச்சை மிளகாய் சிறிது

தக்காளி – 2, இஞ்சி,

பூண்டு விழுதுகள் – சிறிதளவு,

மல்லித்தூள், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மிளகுத்தூள்,  சோம்பு, க.எண்ணெய், சோம்புத்தூள்

உப்பு – தேவையான அளவு.

செய்முறை

  • பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சோம்பை சேர்த்து பொரிந்தவுடன் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
  • சிவந்து வந்ததும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.
  • சிறிது நேரம் கழித்து தக்காளி சேர்த்து பிறகு காளானை சேர்த்து வதக்கிய பிறகு மஞ்சள் தூள், மிளகாய்த்தூள்,  மல்லித்தூள், சோம்புத்தூள், உப்பு சேர்த்து வதக்கிய பிறகு சிறிது நீர் ஊற்றி மூடி விடவும்.
  • சிறிது நேரம் கழித்து மிளகுத்தூள் சேர்த்து இறக்கவும்.
  • சுவையான காளான் மிளகு வறுவல் ரெடி..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here