கோடை வெப்பத்தை எதிர்கொளுவதற்கு சன் கிரீம் போடுவது நல்லதா

0
68

அக்னி நட்சத்திரம் வருவதற்குள்ளேயே வெயில் சுட்டெரிக்கிறது. தமிழகத்தின் பல ஊர்களில் சதமடிக்கும் வெயிலால் குழந்தைகள் முதல் முதியோர் வரை அவதிப்படுகின்றனர். பொதுவாக கோடைக்காலத்தில் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட்டாலும், சருமப் பிரச்னைகளே அதிகமாக உண்டாகும்.

படர்தாமரை

கோடைக்காலத்தில் ஏற்படும் உபாதைகளில் படர்தாமரையும் முக்கியமானது. சருமத்தில் எங்கெல்லாம் மடிப்பு ஏற்படுகிறதோ அங்கே பூஞ்சைகள் (Fungus) உருவாவதால் வரக்கூடியதே படர்தாமரை எனும் பாதிப்பு.

படர்தாமரை ஏற்பட்டால் அதைச் சரிசெய்ய சரும மருத்துவர் பரிந்துரைக்கும் களிம்புகளைப்  பயன்படுத்தவேண்டும். மருந்துக் கடைகளில் விற்பதை வாங்கிப் பயன்படுத்தினால் சருமம் பாதிப்படைவதுடன், பக்க விளைவுகளையும் ஏற்படுத்தும்.

சரும வறட்சி 

கோடைக்காலத்தில் வியர்வை அதிகமாக வெளியேறுவதால் சருமம் வறட்சி அடையும்போது அதன்மீது கிருமிகளின் தாக்கம் அதிகம் இருக்கும். அதைத் தவிர்க்க ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று லிட்டர் தண்ணீர் அருந்தவேண்டும். தண்ணீர் அதிகமாகக் குடிப்பதன் மூலம் சருமம் பளபளப்பாவதுடன் வெயிலிலிருந்தும் நம்மைக் காத்துக்கொள்ளலாம். இதுதவிர பழச்சாறுகள், இளநீர், மோர், பானகம், சர்பத் போன்றவற்றை அருந்துவதும் நல்லது.

இதனை தடுப்பதற்கு வழிகள்

  • தினசரி இரண்டு முதல் மூன்று லிட்டர் சுகாதாரமான தண்ணீரை அருந்தவேண்டும்.
  • பருத்தி ஆடைகளை அணியவேண்டும். இத்தகைய ஆடைகள் வியர்வையை உறிஞ்சுவதுடன், நம் உடலை காற்றோட்டமாக வைத்திருக்கும்.
  •  உடல் அதிகம் வியர்க்காமல் பார்த்துக்கொள்வது நல்லது.
  • கூடுமானவரை வசிப்பிடம் மற்றும் வேலை பார்க்கும் இடம் குளிர்ச்சியாக இருக்கும்படி பார்த்துக்கொள்வது நல்லது.
  • நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை உட்கொள்ளவேண்டும். அதேபோன்று, உடலுக்குக் குளிர்ச்சி தரும் பானங்களை அருந்தலாம்.
  • கோடை வெயிலிலிருந்து தற்காத்துக்கொள்ள குடை, தொப்பி, சன் கிளாஸ், முழுக்கைச் சட்டை அணிவது நல்ல பலனைத் தரும்” என்கிறார் நரசிம்மலு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here