கர்ப்பத்தால் பட வாய்ப்பை தவறவிட்ட எமி ஜாக்சன்…

0
167

ரஜினியுடன் 2.0 படத்தில் நடித்த எமி ஜாக்சன் அடுத்தடுத்த பட வாய்ப்புகளுக்காக காத்திருந்தார். அந்த நேரத்தில் இயக்குனர் ராஜமவுலி தான் இயக்கும் ஆர்ஆர்ஆர் படத்தில் வெளிநாட்டு ஹீரோயின் நடிப்பது பற்றி விசாரித்துக்கொண்டிருந்தார். எமியின் பெயரும் அடிபட்டதால் அந்த தகவல் எமி காதுக்கு சென்றது.

ராஜமவுலியிடமிருந்து அழைப்பு வரும் என காத்திருந்தவருக்கு ஏமாற்றமே கிடைத்தது. பொறுமை இழந்த எமி, தனது கோடீஸ்வர காதலன் ஜார்ஜ் பனயிட்டுவை திருமண நிச்சயதார்த்தம் செய்துகொண்டதாக அறிவித்தார். அடுத்த சில வாரங்களில் தான் கர்ப்பம் ஆனதாகவும் அறிவித்தார்.

எமியின் நிச்சயதார்த்தம் மற்றும் கர்ப்பம் அறிவிப்பால் ராஜமவுலி தனது எண்ணத்தை மாற்றிக் கொண்டு அந்த கதாபாத்திரத்துக்கு வேறு, ஒரு வெளிநாட்டு நடிகையை ஒப்பந்தம் செய்தார். அவரும் மேக்அப் டெஸ்ட் எடுத்தபிறகு என்னால் முடியாது என்று நழுவிவிட்டார். அவருக்கு பதிலாகத்தான் தற்போது நித்யா மேனன் அல்லது ஷ்ரத்தா கபூர் நடிக்க உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here