அதிகாரப்புர்வமாக வெளியிட்டு தினத்தை அறிவித்த ஒன் பிளஸ் நிறுவனம்

0
89

ஒன்பிளஸ் 7 மற்றும் ஒன்பிளஸ் 7 ப்ரோ ஆகிய இரு புதிய ஸ்மார்ட்போன்களும் வரும் மே 14ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுஃளது.

ஸ்மார்ட்போன் தயாரிப்பில் முன்னனி நிறுவனமான ஒன்பிளஸ் கடந்த ஆண்டு ஒன்பிளஸ் 6T ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. இந்த மொபைல் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றது. 6ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி உடைய மாடலின் விலை 37,999 ரூபாய் என்றும் 8ஜிபி ரேம் 128 ஜிபி மெமரி உள்ள மாடல் 41,999 ரூபாய் என்றும் விற்கப்படுகிறது.

இதைத் தொடர்ந்து பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஒன்பிளஸ் 7 ஸ்மார்ட்போன் அடுத்த மாதம் அறிமுகமாக உள்ளது. இந்தியாவில் வரும் மே 14ஆம் தேதி ஒன்பிளஸ் 7, ஒன்பிளஸ் 7 ப்ரோ என இரு மொபைல்கள் வெளியாக உள்ளன.

ஒன்பிளஸ் 7 விலை 39,990 ரூபாயாவும் ஒன்பிளஸ் 7 ப்ரோ விலை 47,990 ரூபாயாக இருக்கலாம் எனத் தெரிகிறது. இதனிடையே இதிலுள்ள சிறப்பம்சங்கள் குறித்த தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளது. அதன்படி, ஒன்பிளஸ் 7 ஸ்மார்ட்போனில் பாப் அப் செல்பி கேமரா உள்ளது. பின்புறத்தில் மட்டும் ட்ரிப்பிள் கேமரா உள்ளது. டூயல் டோன் எல்இடி பிளாஸ் வசதியும் புகுக்கப்பட்டுள்ளது. மேலும், விரல் ரேகை சென்சார், யூஎஸ்பி சி டைப் சார்ஜர், 6.5 இன்ச் திரை, அல்மோல்டு டிஸ்பிளே என சகல வசதிகளும் இருப்பதாக தெரிகிறது. ஸ்னாப்டிராகன் 855 ஆக்டோ கோர் பிராசசரும், ஆண்ட்ராய்டு 9 பை ஆகியவையும் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here